அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்குடாவில் சிறிலங்கா வான்படையினரின் உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் சத்தமற்ற தாக்குதலையே நடத்தியுள்ளனர் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் அறுகம்குடா பாலத்தினை திறந்து வைப்பதற்காக சென்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை ஏற்றி வருவதற்காகச் சென்று கொண்டிருந்த உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கனரகத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் உலங்குவானூர்தி மீண்டும் பயன்படுத்த முடியாதளவுக்கு கடுமையாக சேதமடைந்துள்ளது.
சிறிலங்காப் படைத்தளபதிகள் கூறுவதனைப் போன்று விடுதலைப் புலிகளின் 1- 4 தளம் மணலாறில் தற்போது இல்லை. அது 1991 ஆம் ஆண்டில் ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவ தலைமையில் நடைபெற்ற “இடிமுழக்கம்” படை நடவடிக்கையிலேயே அழித்தொழிக்கப்பட்டு விட்டது. புலிகளின் அந்தத்தளம் தற்போது இடம்மாற்றப்பட்டு விட்டது என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் “சண்டே லீடர்” ஆங்கில வார ஏட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளவற்றின் […]